மத்தியூ அபேசிங்க அரை இறுதிக்கு தகுதிபெறவில்லை; நிலுக்க கருணாரத்ன நாளை களமிறங்கவுள்ளார்

மத்தியூ அபேசிங்க அரை இறுதிக்கு தகுதிபெறவில்லை; நிலுக்க கருணாரத்ன நாளை களமிறங்கவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 9:57 pm

ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் இலங்கையின் மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தை அடைந்தார்.

இதேவேளை, இலங்கை பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன நாளை (11) ரியோ ஒலிம்பிக் விழாவில் களமிறங்கவுள்ளார்.

ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்று நேற்றிரவு நடைபெற்றது.

முதல் சுற்றில் 8 போட்டிகள் உள்ளடக்கப்பட்டதுடன் அவற்றில் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தைப் பெற்றார்.

போட்டியைப் பூர்த்திசெய்ய அவருக்கு 50.96 செக்கன்ட்கள் சென்றன.

ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டிய இலங்கையின் முதல் நீச்சல் வீரர் என்ற சிறப்புடனேயே மத்தியூ அபேசிங்க இந்தமுறை ஒலிம்பிக் விழாவுக்கு தகுதி பெற்றிருந்தார்.

கடந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளில் 7 தங்கப்பதக்கங்களை சுவீகரித்த மத்தியூ அபேசிங்கவினால் ரியோ ஒலிம்பிக் விழாவில் 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் அரை இறுதி சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

இந்நிலையில், தேசிய பட்மிண்டன் சாம்பியனான நிலுக்க கருணாரத்ன நாளை ரியோ ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

14 தடவைகள் தேசிய பட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலுக்க கருணாரத்ன, அதிகத் தடவைகள் தேசிய பட்மிண்டன் சாம்பியனான வீரராகத் திகழ்கிறார்.

2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றிய அவர் நாளை நடைபெறும் போட்டியில் சர்வதேச நிரல்படுத்தலில் இரண்டாமிடத்திலுள்ள சீனாவின் லோங் ச்செங்கை எதிர்த்தாடவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்