பத்தலயாகம மக்களை யானைகளிலிருந்து காக்கும் வேலி ”மக்கள் சக்தி” திட்டத்தால் புனரமைப்பு

பத்தலயாகம மக்களை யானைகளிலிருந்து காக்கும் வேலி ”மக்கள் சக்தி” திட்டத்தால் புனரமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 9:28 pm

மகிழ்ச்சிக்குப் பதிலாக துன்பத்தை மாத்திரம் உரித்தாகக் கொண்டுள்ள எமது மக்களின் கண்ணீரைத் துடைக்கும் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” செயற்றிட்டத்தின் கீழ் மற்றுமொரு திட்டம் நிறைவு செய்யப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நீண்ட காலமாக அனுபவித்த பிரச்சினையொன்றுக்கு தீர்வு வழங்கப்பட்டதை அடுத்து, ஹம்பாந்தோட்டை –
கெலியபுர, பத்தலயாகம மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் கீழ் பத்தலயாகம பகுதியில் யானையிலிருந்து பாதுகாப்புத் தரும் வேலி புனரமைக்கப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு சிவில் பாதுகாப்புப் படையினர், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்