தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 7:10 pm

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதன் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக, சட்டத்தரணி நிஷான் நாகரட்ணம், தயா மாஸ்டர் மீதான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் நெறிப்படுத்தினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் முன்னிலையில் தயா மாஸ்டருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளியா அல்லது சுத்தவாளியா என நீதிபதி வினவியதை அடுத்து, தாம் சுத்தவாளி என தயா மாஸ்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படும் வழக்கில் தயா மாஸ்டருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்படவில்லை.

தயா மாஸ்டருக்கு பிணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை நாளை வரை ஒத்திவைத்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்