சி.எஸ்.என் அலைவரிசையினால் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

சி.எஸ்.என் அலைவரிசையினால் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்ட பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2016 | 12:54 pm

சி.எஸ்.என் அலைவரிசையால், சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 157.5 மில்லியன் ரூபாவை அரச உடைமையாக்குவதற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தனியார் வங்கி ஒன்றில் வேறொரு நிறுவனத்தின் பெயரால், இந்த நிதி வைப்பிலிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்