சர்ச்சைக்குரிய நிலக்கரி கொடுக்கல் வாங்கலினால் நட்டம் ஏற்படவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொடுக்கல் வாங்கலினால் நட்டம் ஏற்படவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொடுக்கல் வாங்கலினால் நட்டம் ஏற்படவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 9:09 pm

சர்ச்சைக்குரிய நிலக்கரி கொடுக்கல் வாங்கலினால் நட்டம் ஏற்படவில்லை என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கரி கொடுக்கல் வாங்கலின்போது பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக பேராசிரியர் கே.கே.வை.டபிள்யூ. பெரேரா தலைமையிலான குழுவொன்றை அமைச்சர் நியமித்திருந்தார்.

இந்த குழுவின் அறிக்கையில் எட்டு வகையான தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீண்டகால ஸ்திரமான விலை மனுவுடன் ஒப்பிடுகையில் நிலக்கரி துரித கொள்வனவு காரணமாக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதமாவதாக அந்த அறிக்கையின் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்டகால ஸ்திரமான விலை மனு மற்றும் துரித கொள்வனவு என்பவற்றை சமமாக ஆராய்கின்றபோது செலுத்தப்பட்ட முழுமையான தொகையினால் சாதகம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கணக்காய்வாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் நிலவியுள்ளது.

கணக்காய்வு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

2009 ஆம் ஆண்டிலிருந்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல் குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.

ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாளை மறுதினம் கோப் (COPE) குழுவிற்கு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க முடியாமற்போகுமென கணக்காய்வாளர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்