கைத்தடியில் பெண்ணைக் கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்திய நால்வருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

கைத்தடியில் பெண்ணைக் கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்திய நால்வருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 6:52 pm

யாழ்ப்பாணம் – கைத்தடியில் பெண்ணொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிகள் நால்வருக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தினால் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஊரியான் கைத்தடி தெற்கு பகுதியில் 18 வயதான யுவதியொருவரை நால்வர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் குறித்த பெண்ணால் வழங்கப்பட்ட சாட்சியம் மற்றும் மருத்துவப் பரிசோதகர்களின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதி எம். இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளிகளுக்கு தலா 2500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2 வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்