காணிகளை விடுவிக்கக் கோரி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் முன்பாக அறவழிப் போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் முன்பாக அறவழிப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 8:54 pm

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவிப்பாஞ்சானில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம் முன்பாக இன்று காலை காணி உரிமையாளர்கள் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் அண்மையில் தெரிவித்த போதிலும், தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு கோரியே மக்கள் இந்த போராட்டத்தினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இராணுவ உயரதிகாரியை சந்திப்பதற்காக நண்பகல் வரை காத்திருந்த மக்கள் இராணுவ உயரதிகாரி வருகை தராத காரணத்தினால் மீண்டும் திரும்பிச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்