ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக் கோரி வயோதிபர் உண்ணாவிரதம்

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கக் கோரி வயோதிபர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 8:56 pm

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வயோதிபர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின், ஓமந்தையில் அமைந்துள்ள உப அலுவலகத்திற்கு முன்பாக குறித்த வயோதிபர் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

த.மகேஸ்வரன் என்ற 73 வயதான ஓமந்தை பகுதியைச் சேர்ந்த வயோதிபரே இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருகின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்