இளவாலையில் கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் கைது

இளவாலையில் கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் கைது

இளவாலையில் கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாய் கைது

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 8:48 pm

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் அண்மையில் உயிருடன் மீட்கப்பட்ட சிசுவின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலையில் கோவிலொன்றுக்கு அருகில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டிருந்தது.

பிறந்து 10 நாட்கள் நிரம்பிய சிசுவை அதன் தாயார் கைவிட்ட நிலையில், கார்ட்போர்ட் பெட்டியிலிருந்து குறித்த சிசு
மீட்கப்பட்டிருந்தது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சிசு மீட்கப்பட்டிருந்ததுடன் இன்று காலை சிசுவின் 36 வயதான தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் ஏற்கனவே மூன்று பிள்ளைகளின் தாய் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சிசுவின் தாய் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சிசு தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேகாரோக்கியத்துடன் சிசு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்