ஆயிரம் ரூபாவிற்காக கால்கடுக்க நின்றிருக்கிறேன் – சமந்தா

ஆயிரம் ரூபாவிற்காக கால்கடுக்க நின்றிருக்கிறேன் – சமந்தா

ஆயிரம் ரூபாவிற்காக கால்கடுக்க நின்றிருக்கிறேன் – சமந்தா

எழுத்தாளர் Bella Dalima

10 Aug, 2016 | 4:17 pm

ஆயிரம் ரூபாவிற்காக தான் கால்கடுக்க நின்று கஷ்டப்பட்டதை உருக்கமாகத் தெரிவித்துள்ளார் சமந்தா.

தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் நாயகிகளில் ஒருவராக இருந்த சமந்தா, மெல்ல தமிழ் திரையுலகிலும் காலடி பதித்தார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

இவர் இளைய தளபதி விஜய்யுடன் நடித்து வெளியான தெறி படம் வெற்றிபெற்றது. அதில் சமந்தாவின் நடிப்பு பலரதும் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில், சமந்தா தான் கடந்து வந்த பாதை பற்றி தெரிவித்துள்ளார்.

[quote]என்ன தான் உழைத்து பெரிய ஆளாக ஆனாலும், நாம் கடந்து வந்த பாதையை மட்டும் மறந்துவிடக் கூடாது. கஷ்டப்படும் போது ஏற்பட்ட அனுபவங்கள் விலை மதிக்க முடியாத பாடங்களைக் கற்றுத்தரும். அதை நாம் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்,[/quote]

என குறிப்பிட்டுள்ளார் அவர்.

மேலும்,

[quote]நான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளேன். ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக கால்கடுக்க மூன்று மணிநேரம் எல்லாம் நின்றிருக்கிறேன். 14 வயதில் இருந்தே என் தேவைக்கான பணத்தை சம்பாதிக்கத் தொடங்கினேன். என் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டேன். அதனால் சிறு சிறு வேலைகள் செய்து என் தேவைக்கான பணத்தை சம்பாதித்தேன்.

திருமணம் நடக்கும்போது மண்டப வாசலில் நின்று இளம்பெண்கள் விருந்தினர் மீது பன்னீர் தெளிப்பது உண்டு. நான் பன்னீர் தெளிக்கும் பணியை செய்திருக்கிறேன். மூன்று மணிநேரம் கால்கடுக்க நின்று பன்னீர் தெளித்தால் ரூ.1000 கொடுப்பார்கள்.

தற்போது தான் அதிகம் சம்பாதிக்கின்றேன். இருப்பினும், திருமண மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளித்து சம்பாதித்த போது இருந்த கிக் தற்போது இல்லை[/quote]

 

என்று சமந்தா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்