ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் வெற்றியைத் தடுத்தது யார்: எஸ்.பி.திசாநாயக்க தகவல்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் வெற்றியைத் தடுத்தது யார்: எஸ்.பி.திசாநாயக்க தகவல்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் வெற்றியைத் தடுத்தது யார்: எஸ்.பி.திசாநாயக்க தகவல்

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 8:28 pm

கடந்த தேர்தலின் போது அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழந்தமைக்குக் காரணம் யார் என்பதனை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று வெளிப்படுத்தினார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]தனியான ஒரு அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கும் வாய்ப்பை முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே வழங்கவில்லை. எமது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ஸவை நியமிக்க நாம் இணங்கியிருந்தோம். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமலுடன் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார். அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்திருந்தார். அதனை மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியதோடு சமலை அனுப்பி வைக்குமாறும் அவரை தள்ளி நிற்குமாறும் கூறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஸவே சமல் வருவதை நிறுத்திவிட்டார். இறுதியில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு, கோட்டாபயவிற்கும் இணக்கம் காணப்பட்டது. அவரையும் மஹிந்த ராஜபக்ஸவே தடுத்தார். உண்மையில் அப்போது ஒரு குழுவாக இந்தக் கூட்டணி இருந்திருக்குமாயின், மஹிந்தராஜபக்ஸ சற்று தள்ளி நின்று சமல் போன்ற ஒருவரை முன்னோக்கி அனுப்பியிருந்தால் எம்மால் 96 அல்ல 116 இல் இருந்து 120 வரையான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்