கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வித்தியா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 1:17 pm

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைதான 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கொலை வழக்கு இன்று (09) ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சந்தேகநபர்களை எதிர்வரும் செப்பெடம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கின் 12 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரினால் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்