மெக்‌ஸிக்கோவில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

மெக்‌ஸிக்கோவில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

மெக்‌ஸிக்கோவில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 3:47 pm

மெக்ஸிக்கோவில் புயல், மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் தாக்கம் காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்ததனால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவின் பியூப்லா மாகாணத்தில் ஹூவாசினாங்கோ நகரில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 200 குடும்பங்கள் வீடுகளை இழந்து தாற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெராக்ரூஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஜலப்பா நகரில் வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 40 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜமப்பா நதியில் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் வலுவிழந்துவிட்டபோதிலும், கனமழை காரணமாக வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மெக்ஸிக்கோவின் தெற்கு மாகாண மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்