மாது கங்கையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

மாது கங்கையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

மாது கங்கையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 1:25 pm

காலி – மாது கங்கையில் மூழ்கி 15 வயதுடைய பாடசாலை சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் 2 நண்பர்களுடன் பலப்பிட்டிய மாதுகங்கைக்கு அண்மையில் உள்ள மைதானத்தில் பட்டம் விடுவதற்காக சென்றதுடன் பின்னர் நண்பர்களுடன் மாது கங்கையில் குளிக்க சென்ற போதே நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை பலப்பட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலப்பிட்டிய ஹினட்டிய ஶ்ரீ ராகுல வித்தியாலத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்