புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: பிரேரணை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: பிரேரணை

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 7:22 pm

புனர்வாழ்வளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து வட மாகாண சபையில் இன்று முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

வட மாகாண சபையின் 58 ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது.

இதன்போது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேசத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிதல் தொடர்பான பிரேரணை ஒன்றையும் வட மாகாண முதலமைச்சர்​ சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்தார்.

இதேவேளை, அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பான பிரேரணையொன்றும் வட மாகாண முதலமைச்சரினால் இன்றைய சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட போதிலும், போதிய காலம் இன்மையால் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்