பஞ்சு அருணாச்சலம் காலமானார்

பஞ்சு அருணாச்சலம் காலமானார்

பஞ்சு அருணாச்சலம் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 3:16 pm

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் சென்னையில் இன்று காலமானார்.

75 வயதான அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர்.

அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.

ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார்.

பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்குத் திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்