தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் சிலர் இன்று நாட்டிற்கு வருகை

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் சிலர் இன்று நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 12:29 pm

நாட்டில் நிலவிய அசாதார சூழ்நிலையின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 74 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் சுயவிருப்பின் பேரில் மூன்று பிரிவினராக இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 தமிழ் அகதிகள் மதுரையிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் திருச்சியிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மூன்றாவது இலங்கை அகதிகள் மிஹின்லங்கா விமானம் மூலம் நாட்டிற்கு வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

குறித்த 75 இலங்கை அகதிகளையும் மன்னார்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,வவுனியா திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியமர்த்தவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேலும் 109 குடும்பங்களைச் சேர்ந்த 64,000 பேர் தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்