கோப் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

கோப் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

கோப் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 4:57 pm

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியினால் இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் விபரங்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் 19 அரச நிறுவனங்கள் சார்ந்த விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்