கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: கரவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்: கரவெட்டியைச் சேர்ந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 6:39 pm

கிளிநொச்சி – பளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி பிரதான சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்து பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியொருவர் முறைப்பாடு செய்திருந்தார்

இதையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் விடுதியின் முகாமையாளர் உட்பட மூவர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடுதி, நீதிமன்ற உத்தரவால் சீல் வைக்கப்பட்டதுடன், விடுதியின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்