ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாதிரி வினாத்தாளில் சாதாரண தர மாணவர்களுக்கான கேள்விகள்?

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாதிரி வினாத்தாளில் சாதாரண தர மாணவர்களுக்கான கேள்விகள்?

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 7:08 pm

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர மாணவர்களுக்கு நடத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையின் மாதிரி கணிதப் பரீட்சை வினாத்தாளின் கேள்விகள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கேள்விகள் சிலவும் ஐந்தாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி பரீட்சை வினாத்தாளில் அடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ. உதயரூபன் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியூஸ்பெஸ்ட், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் வினவியது.

இந்தக் குற்றச்சாட்டை தாம் முழுமையாக மறுப்பதாகவும் பழைய புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்டே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிலர் ஆதாரமற்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்