உலக நாடுகளுக்கான ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மைக்கல் பெல்ப்ஸுக்கு 35 ஆவது இடம்

உலக நாடுகளுக்கான ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மைக்கல் பெல்ப்ஸுக்கு 35 ஆவது இடம்

உலக நாடுகளுக்கான ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் மைக்கல் பெல்ப்ஸுக்கு 35 ஆவது இடம்

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2016 | 11:08 am

ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது 19 ஆவது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

4 பேர் கொண்ட குழுக்கள் கலந்து கொள்ளும் 100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் ‘பிரி ஸ்டைல்’ என்னும் பிரிவில் (4 X 100) அமெரிக்கக் குழுவில் மைக்கல் பெல்ப்சும் பங்குபற்றினார்.

31 வயதான பெல்ப்ஸ் கலந்து கொள்ளும் ஐந்தாவது ஒலிம்பிக் விழா இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து, இதுவரை யாரும் அடையாத சாதனையாக, 19 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 23 பதக்கங்களை ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் மட்டும் பெல்ப்ஸ் பெற்றிருக்கின்றார்.

மேலும் மைக்கல் பெல்ப்ஸை நாம் தனி நாடாக கருதினால் இதுவரை இடம்பெற்ற அனைத்து ஒலிம்பிக் பொட்டிகளிலும் நாடுகள் பெற்ற பதக்கங்களின் பட்டியலில் 35 ஆவது இடம் அவருக்கு உரித்தாகும்.

ஏனெனில் பல நாடுகள் இவர் வெற்றி கொண்ட மொத்த தங்கப் பதக்கங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளன.

Suji 2

Suji 1

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்