அனலைத்தீவு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அனலைத்தீவு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அனலைத்தீவு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

09 Aug, 2016 | 6:00 pm

யாழ். அனலைத்தீவை அண்மித்த கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மீனவர்கள் நால்வரும் அனலைத்தீவை அண்மித்த கடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மீனவர்களிடமிருந்து ட்ரோலர் படகொன்றும் மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஜெகதாபட்டணத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நான்கு தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்