17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது

17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது

17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 1:45 pm

17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கையணி கைப்பற்றியுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 229 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி வாகை சூடியது.

இலங்கை அணி இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் இலங்கையணி டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

சர்வதேச டெஸ்ட் நிரல் படுத்தலில் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளதுடன் இலங்கையணி ஏழாவது இடத்தினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்