வருடமொன்றில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2500 பேர் அடையாளங் காணப்படுகின்றனர்

வருடமொன்றில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2500 பேர் அடையாளங் காணப்படுகின்றனர்

வருடமொன்றில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2500 பேர் அடையாளங் காணப்படுகின்றனர்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 10:04 am

வருடமொன்றில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2500 பேர் அடையாளங் காணப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 6 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றமை பதிவாவதாக புற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

வாய்புற்று நோயால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

வாயினுள் வௌ்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பருக்கள் காணப்படுமாயின் அது வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும் என அவர் கூறியுள்ளார்.

வெற்றிலையுடன் பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து உட்கொள்வது மற்றும் வெற்றிலையுடன் மதுபானம் அருந்துபவர்களுக்கும் வாய்புற்று நோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றை உட்கொள்வதை தவிர்க்குமாறும் புற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்