முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை: ருவன் விஜேவர்தன

முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை: ருவன் விஜேவர்தன

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 6:59 pm

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஊசி மருந்தொன்றை இராணுவம் பயன்படுத்தியதாக வட மாகாண உறுப்பினர் ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டைத் தாம் நிராகரிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டினை சர்வதேசத்தினர் வந்து பார்வையிட்டுச் சென்றதாக சுட்டிக்காட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான எவ்வித காரணமும் தமக்கு இல்லை என குறிப்பிட்டார்.

மேலும், குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் மீண்டும் நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்காகவுமே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

பியகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்