பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கிய பெண்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு

பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கிய பெண்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 7:14 pm

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கும் பெண் தொழில் முனைவோரை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றது.

பெண் தொழில் முனைவோரை, தொழில்துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வு, பெண் தொழில்துறை மற்றும் வர்த்தக சபையின் தலைவர் ரிபா முஸ்தபாவின் தலைமையில் இம்முறை இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கிய 10 பெண்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த பெண் தொழில் முனைவோராகத் தெரிவு செய்யப்பட்ட லக்மினி விஜேசுந்தரவை ஜனாதிபதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்