சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 12:12 pm

திருகோணமலையை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா , மூதூர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களின் சட்டவிரோத வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களால் பிடிக்கப்பட்ட ஒருதொகை மீன்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்