கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் (PHOTOS)

கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் (PHOTOS)

கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 11:07 am

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31 ஆவது ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாளில் ரியோ டி ஜெனீரோவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் நடைபெற்றது.

தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஸர் ஷோ, வண்ணமயமான வானவேடிக்கை ஆகியவை நடைபெற்றன.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தலைவர் கார்லோஸ் குஸ்மான் வரவேற்புரைக்கு பின்னர், உள்நாட்டு நேரப்படி சரியாக அதிகாலை 3.25 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதாக பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபர் மைக்கேல் டெமர் அறிவித்தார்.

இதையடுத்து, குழந்தைகளின் குதூகலமான ஆடல், பாடலுடன் ஒலிம்பிக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. போதைப் பொருளை பயன்படுத்த மாட்டோம், போன்ற உறுதிமொழிகளை இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

இதற்கிடையில், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் பீலேவுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொடி ஏற்றத்துக்கு பின்னர், பிரேசில் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரரான குஸ்ட்டாவோ குவெர்ட்டென் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி மரக்கானா திடலை சுற்றி வந்தார்.

இறுதியாக, பிரேசில் நாட்டின் பிரபல மரத்தன் வீரரான வான்டர்லியி டெ லிமா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

பின்னர், கண்கவர் வானவேடிக்கைகளுடன் துவக்க விழா நிறைவடைந்தது. விழா அரங்கில் மொத்தம் 74,738 பேர் தொடக்க விழா நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளித்தனர். உலகம் முழுவதும் சுமார் 100 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பை பார்த்து ரசித்தனர்.

ரியோ ஒலிம்பிக்கில் 207 நாடுகளை சேர்ந்த 11,000 இற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல இவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த 31 ஆவது ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தாய்நாட்டை கடந்து வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்பவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A sign of the Rio 2016 Olympic is seen in front of dancers during the opening ceremony on the first day of parades at the Sambadrome in Rio de Janeiro, Brazil on February 7, 2016. / AFP / VANDERLEI ALMEIDA (Photo credit should read VANDERLEI ALMEIDA/AFP/Getty Images)

1

FILE - In this July 28, 2012, file photo, fireworks illuminate the sky over the Olympic Stadium during Opening Ceremonies at the 2012 Summer Olympics in London. Always splashy affairs, the parade of athletes this time around will take place Friday night, Aug. 5, 2016, at Maracana Stadium with a country-by-country show of fashion, along with speeches, flag-raising and the lighting of the Olympic cauldron. The idea is to showcase the host country's culture, something that has earned oohhs and aahhs through time, usually also accompanied by some head-scratching as traditions and history play out. (AP Photo/Mark J. Terrill, File)

_90693275_green_getty

_90693590_gisele_getty

index

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்