எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றில் பெறுமதி சேர் வரித்திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு

எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றில் பெறுமதி சேர் வரித்திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 8:18 pm

பெறுமதி சேர் வரித் திருத்த சட்டமூலம் (VAT) மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 20 ஆம் திகதியே சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது.

VAT வரி வீதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருந்த உத்தரவினை இரத்து செய்யும் வகையில், உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால் இந்த விவாதம் இரத்து செய்யப்பட்டிருந்தது.

11 வீதமாகக் காணப்பட்ட VAT வரியை கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் 15 வீதமாக அதிகரித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், பாராளுமன்ற அனுமதியின்றி இதனை செயற்படுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்