ஊதியம் வழங்காததால் டுபாய் சத்வா நகரில் இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில்

ஊதியம் வழங்காததால் டுபாய் சத்வா நகரில் இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில்

ஊதியம் வழங்காததால் டுபாய் சத்வா நகரில் இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 9:41 am

டுபாய் சத்வா நகரில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த 34 பேர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் பணிபுரியும் நிறுவனம் தமக்கான ஊதியத்தை உரிய வகையில் வழங்க தவறியுள்ளதாகவும், அடிப்படை வசதிகள் ஏதும் பெற்று தரவில்லை எனவும் இலங்கை பணியாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

தொழிற்சாலையொன்றில் சுத்திகரிப்பு பணிகளுக்காக 34 பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் டுபாய் சத்வா நகருக்கு சென்றுள்ளனர்.

மூன்று மாதங்கள் பணிபுரிந்த தமக்கு ஊதியம் வழங்காததால், கடந்த 2 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை என குறித்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சத்வா நகரிலுள்ள பஸ் நிலையத்தில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பணியாளர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தனர்.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பெரும் சிரமத்திற்குள் வாழ்வதாகவும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் டுபாய் கொன்சியூலர் நாயகம் ச்சரித்த யத்தோகொடவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் முறைபாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த டுபாய் கொன்சியூலர் நாயகம், பணியார்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாளை டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளதாக வௌநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்