உணவகத்தில் சர்வராகப் பணியாற்றும் ஒபாமாவின் இளைய மகள் சாஷா (Photos)

உணவகத்தில் சர்வராகப் பணியாற்றும் ஒபாமாவின் இளைய மகள் சாஷா (Photos)

உணவகத்தில் சர்வராகப் பணியாற்றும் ஒபாமாவின் இளைய மகள் சாஷா (Photos)

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 5:15 pm

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இரண்டாவது மகள் சாஷா, மார்தாவ்னியா அர்டில் உள்ள உணவகம் ஒன்றில் சர்வராக பணியில் இணைந்துள்ளார்.

15 வயதான சாஷா, அங்கு உணவு பரிமாறுதல் மற்றும் பில் போடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கோடைக்கால விடுமுறையில் பணிபுரிய விரும்பிய தனது இளைய மகளை, ஒபாமா தனது உறவினர் ஒருவர் நடத்தும் குறித்த உணவகத்திற்கு அனுப்பியுள்ளார்.

நாளொன்றுக்கு 4 மணி நேரம் சாஷா அங்கு பணிபுரிகின்றார்.

அது மீன் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அங்கு வருபவர்கள் விரும்பும் மீன் உணவை அவர்களுக்குப் பரிமாறுவது, பொதி செய்து கொடுப்பது, பில் போடுவது மற்றும் காரில் இருந்துகொண்டு உணவுப் பொருட்களைக் கேட்பவர்களுக்கு கொண்டு சென்று கொடுப்பது என சகல பணிகளிலும் ஈடுபட்டுள்ளால் சாஷா.

இதுவரை ஒபாமாவின் மகள்கள் பலத்த பாதுகாப்பில் இருந்தனர். தற்போது அதைத் தளர்த்தி, மகள்களை வெளியே நடமாடவிட்டு, உலகை அவர்களுக்குப் புரிய வைக்க ஒபாமா விரும்பியதாகத் தெரிகிறது.

இருந்தாலும், சாஷாவை அதிகாரிகள் தூரத்திலிருந்து கண்காணித்து, வேலை முடிந்ததும், வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

sasha-obama-to-work-at-takeout-window-of-a-seafood-restaurant-457665b915bdf83a1a76971752d76560 obamas-martha-vineyard

1470473553-4762

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்