”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 9:36 pm

மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் இன்று வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வவுனியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு தமிழருவி த.சிவகுமாரன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்