இருளில் மூழ்கியிருந்த வெல்ல மீன்பிடித் துறைமுகம் மக்கள் சக்தியால் இன்று ஔிபெற்றது

இருளில் மூழ்கியிருந்த வெல்ல மீன்பிடித் துறைமுகம் மக்கள் சக்தியால் இன்று ஔிபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2016 | 9:06 pm

கரையையும் கடலலையையுமன்றி முகத்தில் சிரிப்பலைகளைக் காண முடியாத சிலாபம் – வெல்ல மீனவக்கிராம மக்களின் முகம்களில் இன்று புன்னகை குடிகொண்டிருந்தது.

இக்கிராமத்திலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கலங்கரை விளக்கின்மையால் பல வருடங்களாக அல்லற்பட்டனர்.

அவர்களின் துயரினை அறிந்து கலங்கரை விளக்கினை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி”.

பல வருடங்களாக இருளில் மூழ்கியிருந்த சிலாபம் – வெல்ல மீன்பிடித் துறைமுகம், நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி, 100 நாட்கள்” திட்டத்தினூடாக இன்று ஔிபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்