இன்றும் 3 மாவட்டங்களில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள்

இன்றும் 3 மாவட்டங்களில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள்

இன்றும் 3 மாவட்டங்களில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2016 | 9:31 am

நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் இன்றைய தினமும் மூன்று மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன.

கடந்த முதலாம் திகதி ஆரம்பமான இந்த அமர்வுகள் நாளை (07) வரை நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்று (06) காலை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளதுடன், பதுளை பிரதேச செயலகத்திலும் மாத்தளையிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 5 நாட்களாக நாட்டின் பல மாவட்டங்களிலும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்திற்கான செயலணியின் அமர்வுகள் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

மருதங்கேணி, நாகர்கோயில், வண்ணாங்கேணி, பளை, இத்தாவில் மற்றும் சுண்டிக்குளம் பகுதி மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மேலும் நேற்றைய தினம் கிளிநொச்சி கூட்டறவுச் சபை மண்டபத்தில் நடைபெற்ற செயலணியின் இரண்டாம் நாள் அமர்வில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது கருத்துக்களை பதிவுசெய்தனர்.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பகுதியில் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று இடம்பெற்றது .

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்