போதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

போதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

போதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2016 | 10:12 am

போதையில் இருந்த சாரதி ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்து 15,000 ரூபாவை பெற்றுகொள்ள முயன்ற கொஹூவலை பொலிஸ்நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தினத்தில் நபர் ஒருவர் போதையில் வேனை செலுத்த முடியாத நிலையில் வீதி ஓரத்தில் வேனை நிறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த நபரை பொலிஸார் கொஹூவலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வேனில் குறித்த நபரின் வேன் மோதியதாக தெரிவித்து அதற்காக 15,000 ரூபாய் பொலிஸ் உத்தியோகத்தர் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்