நம்பிக்கையின் சுடர் பேரணி அம்பலாங்கொடையைச் சென்றடைந்தது

நம்பிக்கையின் சுடர் பேரணி அம்பலாங்கொடையைச் சென்றடைந்தது

நம்பிக்கையின் சுடர் பேரணி அம்பலாங்கொடையைச் சென்றடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2016 | 10:42 pm

இலங்கையைச் சூழ பயணிக்கும் நம்பிக்கையின் சுடர் இன்று அம்பலாங்கொடை பகுதியைச் சென்றடைந்தது.

நம்பிக்கையின் சுடர் பேரணியின் 20 ஆவது நாள் பயணம் இன்று காலை காலியிலிருந்து ஆரம்பமாகியது.

காலி மாவட்ட உதவி செயலாளர் சத்துரங்க குணசேகர மற்றும் காலி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி ஆகியோர் தலைமையில் இன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மெய்வல்லுநரான தாமர சமன் தீபிக்க நம்பிக்கையின் சுடரை ஏந்திச் சென்றார்.

இன்றைய நம்பிக்கையின் சுடர் பேரணியில் பெருமளவிலான விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ்பெஸ்ட் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நம்பிக்கையின் சுடர் பேரணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்