இரண்டாவது நாளாகவும் தொடரும் வடமாகாண தொண்டராசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் வடமாகாண தொண்டராசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் வடமாகாண தொண்டராசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Aug, 2016 | 11:43 am

வடமாகாண தொண்டராசிரியர்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். கச்சேரியடியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று (01) காலை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தங்கள் நியமனத்துக்கான பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்