HIV தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 வீதமானவர்கள் மாத்திரமே மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

HIV தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 வீதமானவர்கள் மாத்திரமே மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

HIV தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 வீதமானவர்கள் மாத்திரமே மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

எழுத்தாளர் Staff Writer

31 Jul, 2016 | 9:06 am

நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களில் 25 வீதமானவர்கள் மாத்திரமே மருத்துவ சிகிச்சைகளை பெறுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் HIV தொற்றுக்குள்ளான 4200 பேர் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 128 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் 39 மில்லியன் பேர் HIV தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு 25 இலட்சமானோர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகுவதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

79 நாடுகளில் HIV தொற்று பரவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்