English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Jul, 2016 | 11:56 am
நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கின் வசமுள்ள ‘வட்ஸ்அப்’ தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்ட் செய்து 3 ஆவது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது.
இந்நிலையில், வட்ஸ்அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என அப்பிள் இயங்கு தளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வட்ஸ் அப்பில் உரையாடல்களை நாம் Delete செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது ‘Clear all chats’ மூலமாக அழித்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது.
அதை 3 ஆவது நபரால் கண்காணிக்க இயலும் எனவே, போனில் இருந்து ‘வட்ஸ்அப் ஐ அழித்து விடுவது ஒன்றே ஒரே தீர்வு.
என்கிரிப்சன் வசதியை கொண்டுவரப்பட்ட போதிலும் ‘வட்ஸ்அப்’ உரையாடல்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
இதை அவரே சோதித்து பார்த்து உறுதி செய்துள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
30 Apr, 2019 | 10:52 AM
19 Jul, 2017 | 01:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS