போரதீவுபற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக 2 வீடுகளுக்கு சேதம்

போரதீவுபற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக 2 வீடுகளுக்கு சேதம்

போரதீவுபற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக 2 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 12:10 pm

மட்டக்களப்பு, போரதீவுபற்று, திக்கோடை கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கிராமத்தினுள் இன்று (30) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், 2 வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன், செய்கைகளையும் நாசமாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இந்த கிராம மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு ஆளாகி வருவதுடன், யானைத் தாக்குதலில் கிராமத்தில் இதுவரை மூன்று உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து தமக்குப் போதுமான பாதுகாப்பை பெற்றுத்தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்