குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்குமாறு மக்கள் கோரிக்கை 

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 8:15 pm

1996 ஆம் ஆண்டு மூதூர் – குமாரபுரத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் சட்டமா அதிபர் ஊடாக மேன்முறையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி திருகோணமலை – குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் ஆறு பேரும் கடந்த 27 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரித்து தமக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குமாரபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்