ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று நிட்டம்புவ பகுதியைச் சென்றடைந்தது

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று நிட்டம்புவ பகுதியைச் சென்றடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 9:59 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று வரக்காப்பொல – நெலும்தெனியவில் இருந்து நிட்டம்புவ பகுதியைச் சென்றடைந்தது.

வரக்காபொல – நெலும்தெனியவில் இன்று காலை பாதயாத்திரை ஆரம்பமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கலந்துகொள்ளாததுடன், ஏனையவர்கள் கண்டி – கொழும்பு வீதியின், அம்பேபுஸ்ஸ, வரக்காப்பொல, பஸ்யால பகுதிகளைக் கடந்து நிட்டம்புவ நகரைச் சென்றடைந்தனர்.

நிட்டம்புவவில் நாளை (31) ஆரம்பமாகவுள்ள பேரணி கிரிபத்கொடை வரை பயணிக்கவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்