English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 Jul, 2016 | 10:07 pm
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்காக கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு வாகனங்கள் வரக்காப்பொல பிளாட்டுவ விகாரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச வாகனங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய காரணத்தால் இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேன் ஒன்றும் பாரம்தூக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வரக்காப்பொல நகருக்கு அருகில் அமைந்துள்ள தர்மசிறி சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்காக குறித்த பாரம்தூக்கி இன்று கொண்டுவரப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொஸ்கொடவில் இன்று மாலை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களைத் தெளிவூட்டும் நிகழ்வின் போது இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பொன்று பொலிஸ் மா அதிபருக்கு வந்துள்ளது.
இதுபற்றி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்ததாவது,
[quote]எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளமையால் கைப்பற்றுவதற்கு செல்கின்றோம். எவரேனும் ஒருவர் எமது கடமைக்கு இடையூறு விளைவித்தால் அவர்களைக் கைது செய்வோம். இன்றும் சிறிது நேரத்தின் பின்னர் எனக்கு அழையுங்கள். இன்றும் அரை மணித்தியாலங்களில் நான் அங்கு வருவேன். எவரையும் அழைத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம். பதிவுகளை மேற்கொள்ளுங்கள். நிழற்படங்களையும் ஔிப்பதிவுகளையும் பதிவு செய்யுங்கள். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லுங்கள். மேலும், உத்தியோகஸ்தர்கள் தேவை என்றால் அழைத்துக்கொள்ளுங்கள். விசேட அதிரடிப் படையினரின் தேவை ஏற்பட்டால் அவர்களையும் அழையுங்கள்.[/quote]
என தெரிவித்தார்.
மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…
08 Feb, 2022 | 05:43 PM
30 Mar, 2021 | 03:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS