ஐந்து வருடங்களுக்கு இணக்க அரசாங்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஐந்து வருடங்களுக்கு இணக்க அரசாங்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jul, 2016 | 7:11 pm

ஐந்து வருடங்களுக்கு இணக்க அரசாங்கமாக செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட 5 வருட காலத்திற்குள் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய அனைத்து சேவைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்ற தேசிய நடமாடும் சேவையின் இறுதி நிகழ்வுகள் இன்று பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்றன.

இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்