எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 10:04 am

எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுமார் 2500 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த காலப்பகுதியில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.

சேறு மற்றும் நீர் நிலைகளை அண்மித்து தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எலிக் காய்ச்சல் காரணமாக சிலருக்கு நுரையீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் டொக்டர் பபா பலிஹவடன மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்