அளுத்மாவத்தை ரெட்பானாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

அளுத்மாவத்தை ரெட்பானாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

அளுத்மாவத்தை ரெட்பானாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 11:50 am

முகத்துவாரம், அளுத்மாவத்தை, ரெட்பானா வத்தை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

முச்சக்கர வண்டியில் வந்த மூவரே, துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

ரெட்பானா வத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்