அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2016 | 2:00 pm

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையொன்றை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.

நிறைவேற்றதிகாரம், அதிகாரப் பகிர்வு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவினால் முக்கியமாக கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலணியின் பிரதம அதிகாரி நீல் இத்தவெல குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் சகல முதலமைச்சர்களையும் அழைத்து அண்மையில் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டன.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவிடம் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்றிவதற்காக நியமிக்கப்பட்ட லால் விஜேநாயக்க குழுவும் தனது அறிக்கையை அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து ஆராய்வதனை இலகுபடுத்துவதற்காக ஆறு துணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள், அரச சேவை, சட்டம் மற்றும் ஒழுங்கு, அரச நிதி, நீதித்துறை, உள்ளூராட்சி நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணுவதற்காக இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த துணைக் குழுக்களின் பிரதானிகளும் அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலணியின் பிரதம அதிகாரி நீல் இத்தவெல குறிப்பிட்டார்.

துணைக் குழுக்களின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் பெற்றுக் கொள்வதற்கு எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் தலைமையிலான அரசியலமைப்புச் செயற்பாட்டுக் குழு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்