மேன் பவர் ஊழியர்களை இலங்கை மின்சார சபையின் நிலையான ஊழியர்களாக இணைத்துக்கொள்வோம்

மேன் பவர் ஊழியர்களை இலங்கை மின்சார சபையின் நிலையான ஊழியர்களாக இணைத்துக்கொள்வோம்

மேன் பவர் ஊழியர்களை இலங்கை மின்சார சபையின் நிலையான ஊழியர்களாக இணைத்துக்கொள்வோம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 8:27 pm

இலங்கை மின்சார சபையின் மின் வாசிப்பாளர்களின் 24 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்.

மின் சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நாரஹேன்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மின் சக்தி மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி பிரதியமைச்சர், அஜித் பீ. பெரேரா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

[quote]நாம் ஜனவரி மாதத்தில் இருந்து ஸ்மாட் மானிகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று உங்களுக்கு மானிகளை வாசிக்க வேண்டியதில்லை. தற்போதைய கணனி யுகத்தில் கையடக்கத் தொலைபேசி போன்று ஸ்மாட் மானிகளையும் நாம் ஆரம்பிக்க வேண்டும். நாம் ஸ்மாட் மானிகளுக்குச் சென்றால் தமக்கு தொழில் இல்லாமல் போகும் என்று மேன் பவர் நண்பர்கள் தெரிவித்தனர். நண்பர்களே உங்கள் அனைவரையும் இலங்கை மின்சார சபையின் நிலையான ஊழியர்களாக நாம் இணைத்துக் கொள்வோம் என்ற செய்தியைக் கூறுகிறோம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்