முன்னாள் தலைவர்கள் திறம்பட ஆட்சி செய்திருந்தால் இன்று பாதயாத்திரை செல்ல வேண்டி ஏற்பட்டிருக்காது

முன்னாள் தலைவர்கள் திறம்பட ஆட்சி செய்திருந்தால் இன்று பாதயாத்திரை செல்ல வேண்டி ஏற்பட்டிருக்காது

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 7:56 pm

முன்னாள் தலைவர்கள் திறம்பட ஆட்சி செய்திருந்தால் அவர்களுக்கு வீதியில் இன்று பாதயாத்திரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கேகாலை மாவட்டத்தின் விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு 50 கணனிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று மாவனெல்லை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்