மாவை சேனாதிராஜா மீது தாக்குதல்: வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது

மாவை சேனாதிராஜா மீது தாக்குதல்: வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 8:57 pm

2001 ஆம் ஆண்டு தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் யாழ். மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கடிதம் சட்டமா அதிபரால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 4 ஆம் திகதி 7 ஆம் மாதம் 2016 ஆம் ஆண்டு என்ற திகதியிடப்பட்ட கடிதத்திற்கு அமைய, இந்த வழக்கு விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளையும் திருகோணமலை மேல் நீதிமன்றத்திலிருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ். மேல் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியனால் பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஊர்காவற்துறையில் வைத்து மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சட்ட விரோத கூட்டம் கூடிய நபர்களுடன் 04 பிரதிவாதிகளுக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்